19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது


19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது
x
தினத்தந்தி 7 Oct 2018 2:10 PM GMT (Updated: 7 Oct 2018 2:10 PM GMT)

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

டாக்கா, 

8 அணிகள் இடையிலான 5-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.  இந்தநிலையில்
 டாக்காவில் இன்று நடை பெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்தியா 304 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வல், அனுஜ், பிரப் சிம்ரன் சிங், ஆயுஷ் படோனி ஆகியோர் அரைசதம் அடித்தனர். 

இதனையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியினரின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தியாகி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இந்தியா 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Next Story