கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு + "||" + One Day Cricket: Extinction to Virat Kohli topped the batsman rankings

ஒருநாள் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு

ஒருநாள் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.
துபாய்,

தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் முடிவின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.


இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி (884 புள்ளிகள்), மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா (842 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜோரூட் (818 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (803 புள்ளிகள்), இந்திய அணி வீரர் ஷிகர் தவான் (802 புள்ளிகள்), பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (798 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் (785 புள்ளிகள்) ஆகியோர் முறையே மாற்றமின்றி 1 முதல் 7 இடங்களில் தொடருகின்றனர். நியூசிலாந்து வீரர் கனே வில்லியம்சன் (778 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக் (769 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கியும், இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ (769 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறியும் 9-வது இடத்தை இணைந்து பெற்றனர். இந்திய வீரர் டோனி 18-வது இடத்தில் தொடருகிறார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (797 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் (788 புள்ளிகள்), இந்திய வீரர் குல்தீப் யாதவ் (700 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் (699 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் (696 புள்ளிகள்) ஆகியோர் முறையே 1 முதல் 5 இடங்களில் அப்படியே தொடருகின்றனர். தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா (691 புள்ளிகள்) 3 இடம் முன்னேறி 6-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் (685 புள்ளிகள்) ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 3 இடங்கள் ஏற்றம் கண்டு 7-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் (681 புள்ளிகள்) 2 இடம் சரிந்தும், பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி (681 புள்ளிகள்) 2 இடம் சறுக்கியும் 8-வது இடத்தை கூட்டாக பெற்றனர். ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் ரகுமான் (679 புள்ளிகள்) 2 இடம் சறுக்கி 10-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹல் (661 புள்ளிகள்) 11-வது இடத்தில் நீடிக்கிறார்.

அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து அணி 127 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து அணி 112 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க அணி 110 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 101 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 100 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், வங்காளதேச அணி 92 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், இலங்கை அணி 77 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் அணி 69 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி 67 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளன. இந்த மாதம் நடைபெறும் இலங்கைக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து அணி இழந்தால் முதலிடத்தை இழக்க நேரிடும். இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்பு ஏற்படும்.