கிரிக்கெட்

கேரளாவுக்கு சுற்றுலா வாருங்கள்: விராட் கோலி பரிந்துரை + "||" + Virat Kohli praises Kerala, urges people to pay a visit

கேரளாவுக்கு சுற்றுலா வாருங்கள்: விராட் கோலி பரிந்துரை

கேரளாவுக்கு சுற்றுலா வாருங்கள்: விராட் கோலி பரிந்துரை
கேரளா வெள்ள பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீண்டு விட்டதாகவும், எனவே மக்கள் முன்பு போல வருமாறு விராட் கோலி பரிந்துரைத்துள்ளார்.
திருவனந்தபுரம்,

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை(நாளை) நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் கோவளத்தில் உள்ள பீச் ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ளனர்.

பீச் ரிசார்ட்டில் உள்ள விருந்தினர் பக்கத்தில் விராட் கோலி குறிப்பு ஒன்றை எழுதினார். அதில், ''கேரளாவில் இருப்பது பேரின்பம். இங்கு வருவதை விரும்புகிறேன். இந்த இடத்தின் ஆற்றலை நேசிக்கிறேன். கேரளாவின் அழகு அனுபவித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. கடவுளின் பிரதேசத்தில். அதன் அமைதியை, ஆற்றலைக் காண எல்லோரும் இங்கு வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

கேரளா அதன் வெள்ள பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டது. இப்போது சுற்றுலா வர பாதுகாப்பான இடமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை நான் இங்கு வரும்போது என்னை மகிழ்ச்சியூட்டும் கேரளாவுக்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு : கேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
சபரிமலை கோவில் நடை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் கேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
2. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு
சபரிமலை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரளா முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
3. ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களாகவே தேர்வு செய்தோம்: டாசால்ட் நிறுவன சிஇஓ விளக்கம்
ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களாகவே தேர்வு செய்தோம் என்று டாசால்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
4. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது - ரகுராம்ராஜன் கருத்து
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது என ரகுராம்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
5. ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து பாக்.கவலை: இந்தியா பதிலடி
ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து கவலை தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.