கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: 11 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி அணிக்கு திரும்புகிறார், ஷிகர் தவான் + "||" + IPL Cricket: After 11 years, he returns to Delhi, Shikhar Dhawan

ஐ.பி.எல். கிரிக்கெட்: 11 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி அணிக்கு திரும்புகிறார், ஷிகர் தவான்

ஐ.பி.எல். கிரிக்கெட்: 11 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி அணிக்கு திரும்புகிறார், ஷிகர் தவான்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் 11 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு திரும்புகிறார்.
ஐதராபாத்,

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 29-ந் தேதி முதல் மே 19-ந் தேதி வரை நடக்கிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேர்தல் தேதிக்கு தகுந்தபடி போட்டியின் தொடக்க கட்ட ஆட்டங்களை தென்ஆப்பிரிக்கா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை செய்து வருகிறது.


ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் டிசம்பர் 16-ந் தேதி நடைபெறுகிறது. ஏலத்துக்கு முன்னதாக வீரர்கள் விடுவிப்பு மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றை அணி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. வீரர்கள் பரிமாற்றம் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் முக்கிய வீரராக விளங்கிய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 11 ஆண்டுகளுக்கு பிறகு தனது தாயக அணியான டெல்லி டேர்டெவில்ஸ்க்கு திரும்புகிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கடந்த சீசனில் ஷிகர் தவானை ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தக்க வைக்கவில்லை. அவரை ஏலத்தின் மூலம் ரூ.5.2 கோடிக்கு எடுத்தது. ஆனால் தனக்கு நிர்ணயித்த விலையில் ஷிகர் தவான் அதிருப்தி அடைந்ததாக செய்திகள் வெளியாயின.

இதைத்தொடர்ந்து ஷிகர் தவானை விடுவிக்க ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ஷிகர் தவானை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விட்டுக்கொடுத்து விட்டு அவருக்கு பதிலாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள விஜய் சங்கர் (ரூ.3.2 கோடி), ஷபாஸ் நதீம் (ரூ.3.2 கோடி), அபிஷேக் சர்மா (ரூ.55 லட்சம்) ஆகியோரை தங்கள் பக்கம் இழுத்து கொள்ள ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.

2008-ம் ஆண்டு நடந்த தொடக்க ஐ.பி.எல். போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஷிகர் தவான் விளையாடினார். அதன் பிறகு அடுத்த 2 ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றார். இதனை அடுத்து ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு மாறினார். 2013-ம் ஆண்டு முதல் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சன் ரைசர்ஸ் அணிக்காக ஷிகர் தவான் அதிக ரன் குவித்த வீரர் ஆவார். அவர் அந்த அணிக்காக 91 ஆட்டங்களில் ஆடி 2,768 ரன்கள் குவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்: பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை தோற்கடித்து 5-வது வெற்றியை தனதாக்கியது. #IPL2019 #MIvRCB
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு
பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி த்ரில் வெற்றி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தாவை சுருட்டி சென்னை அணி 5-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சென்னையில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை 108 ரன்னில் சுருட்டி அட்டகாசப்படுத்திய சென்னை அணி 5-வது வெற்றியை ருசித்தது.