கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வெற்றி + "||" + 2nd Test against New Zealand: Pakistan innings win

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்றது.
துபாய்,

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 90 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. 328 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 112.5 ஓவர்களில் 312 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் வெற்றியை ருசிப்பது இதுவே முதல் நிகழ்வாகும். நியூசிலாந்து அணியில் டாம் லாதம் (50 ரன்), ராஸ் டெய்லர் (82 ரன்), ஹென்றி நிகோல்ஸ் (77 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தும் பலன் இல்லாமல்போய் விட்டது.


முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை அள்ளிய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். மொத்தத்தில் யாசிர் ஷா 184 ரன்கள் விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாகிஸ்தான் பவுலரின் 2-வது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இம்ரான்கான் 1982-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 116 ரன்களுக்கு 14 விக்கெட் வீழ்த்தியதே ஒரு டெஸ்டில் பாகிஸ்தான் பவுலரின் சிறந்த பந்து வீச்சாக நீடிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனுக்கு வந்துள்ளது. கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 3-ந்தேதி அபுதாபியில் தொடங்குகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 250 ரன்னில் ‘ஆல்-அவுட்’
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 250 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஸ்டீவன் சுமித்தை ‘பவுன்சர்’ பந்து தாக்கி கீழே சரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
2. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 268 ரன்கள் இலக்கு: வெற்றியை நோக்கி இலங்கை அணி
காலே டெஸ்டில் நியூசிலாந்து நிர்ணயித்த 268 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 133 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
3. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 267 ரன்னில் ‘ஆல்-அவுட்’
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 267 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
4. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? - கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ள இந்திய அணி இன்று கடைசி ஒரு நாள் போட்டியில் களம் இறங்குகிறது.
5. இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் 3 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் தென்ஆப்பிரிக்க அணியில் 3 புதுமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.