கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி தடுமாற்றம் + "||" + Ranji Cricket: Mumbai team Glitch

ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி தடுமாற்றம்

ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி தடுமாற்றம்
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை அணி தடுமாறி வருகிறது.
நாக்பூர்,

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் விதர்பா- மும்பை அணிகள் (ஏ பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் நாக்பூரில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த விதர்பா அணி தொடக்க நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய விதர்பா முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தடுமாற்றத்துடன் தொடங்கிய மும்பை அணி ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் சித்தேஷ் லாட் (3 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (0), விக்கெட் கீப்பர் ஆதித்ய தாரே (12 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.


கொல்கத்தா ஈடன்கார்டனில் நடக்கும் டெல்லிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) 2-வது நாளான நேற்று தனது முதல் இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி 220 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் 20 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய டெல்லி அணி நேற்றைய முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

1. வெற்றி மட்டுமே எப்போதும் குறிக்கோள்: “6 விக்கெட் வீழ்த்தியது கனவு போன்று உள்ளது” - மும்பை அணியின் புதுமுக பவுலர் ஜோசப் பேட்டி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை சாய்த்தது கனவு போன்று உள்ளது என்று மும்பை இந்தியன்ஸ் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் கூறினார்.
2. புரோ கைப்பந்து லீக்: மும்பை அணி அரைஇறுதிக்கு தகுதி
புரோ கைப்பந்து லீக் போட்டியில், மும்பை அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.
3. ரஞ்சி கிரிக்கெட்: விதர்பா அணி மீண்டும் ‘சாம்பியன்’
ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவை சாய்த்து தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
4. ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி: வெற்றிப் பாதையில் விதர்பா அணி
ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா அணி வெற்றிப் பாதையில் பயணிக்கிறது.
5. ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா-சவுராஷ்டிரா மோதல்: நாக்பூரில் இன்று தொடக்கம்
நாக்பூரில் இன்று தொடங்கும் ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில், விதர்பா-சவுராஷ்டிரா அணிகள் மோத உள்ளன.