கிரிக்கெட்

2019-ல் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள தொடர்கள்: முழு விவரம் + "||" + The Indian cricket team will play in 2019

2019-ல் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள தொடர்கள்: முழு விவரம்

2019-ல் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள தொடர்கள்: முழு விவரம்
2019-ல் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள தொடர்கள் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்திய அணிக்கு 2018-ம் வருடம் மிகச்சிறப்பாக அமைந்தது. 14 டெஸ்டுகள், 20 ஒருநாள் போட்டிகள், 19 டி20 ஆட்டங்களில் விளையாடி அதிக ஆட்டங்களில் வெற்றி பெற்றது.

2019-ல் இந்திய அணி விளையாடவுள்ள தொடர்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வருடம் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளதால் இந்திய அணி குறைவான டெஸ்டுகளிலேயே பங்கேற்கிறது. 

உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு டெஸ்ட் தொடர்கள் ஆரம்பிக்கவுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 டெஸ்டுகளுடன் இந்திய அணியின் தொடர்கள் ஆரம்பிக்கவுள்ளன.

2018 முதல் 2023 வரை இந்திய அணி 51 டெஸ்டுகள், 83 ஒருநாள், 69 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அதன்படி இந்த வருடம் இந்திய அணி 8 டெஸ்டுகளும் 19 ஒருநாள் மற்றும் 11  இருபது ஓவர் போட்டிகளிலும்  கலந்து கொள்கிறது. இதுதவிர இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டியில் குறைந்தபட்சம் 9 ஆட்டங்களில் விளையாடவுள்ளதால் இந்த வருடம் இந்திய அணி குறைந்தபட்சம் 28 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. கடந்த வருடத்தை விடவும் அதிக எண்ணிக்கை இது.

இந்த வருட ஐசிசி எஃப்டிபி-யின்படி, மார்ச் மாதம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி விளையாட வேண்டும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதமே ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளதால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்தத் தொடர்கள் நடைபெறாது என்றே தெரிகிறது.  இந்தியாவுக்கு வரும் ஆஸ்திரேலியா தனது கடைசி ஆட்டமாக மார்ச் 13 அன்று 20  ஓவர் போட்டியில்  பங்கேற்கிறது. இதன்பிறகு ஐபிஎல் தொடங்கவுள்ளது.


டெஸ்டுகள் - 8
ஒருநாள் - 28 (குறைந்தபட்சம்)
20 ஓவர் போட்டி - 11

2019-ல் இந்திய அணி பங்கேற்கும் தொடர்கள்:

இந்தியாவில் நடைபெறவுள்ள தொடர்கள்:

5 ஒருநாள் vs ஆஸ்திரேலியா
2 டி20 vs ஆஸ்திரேலியா
3 டெஸ்டுகள் vs தென் ஆப்பிரிக்கா
2 டெஸ்டுகள் vs வங்கதேசம்
3 டி20 vs வங்கதேசம்
3 ஒருநாள் vs மே.இ.
3 டி20 vs மே.இ.

வெளிநாடுகளில் இந்திய அணி பங்கேற்கும் தொடர்கள்:

1 டெஸ்ட் vs ஆஸ்திரேலியா
3 ஒருநாள் vs ஆஸ்திரேலியா
5 ஒருநாள் vs நியூஸிலாந்து
3 டி20 vs நியூஸிலாந்து
2 டெஸ்டுகள் vs மே.இ.
3 ஒருநாள் vs மே.இ.
3 டி20 vs மே.இ.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலைக்கு காரணம் என்ன? - பரபரப்பு தகவல்கள்
கடன் பிரச்சினையால் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை -டேல் ஸ்டெயின் கிண்டல்
இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அதற்கு கோலியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் டேல் ஸ்டெயின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
3. கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இறுதி பட்டியலில் 6 பேர்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி இறுதி பட்டியலில் 6 பேர் இடம் பெற்று உள்ளனர்.
4. டோனியின் ஆடம்பர கார் வரிசையில் சேர்ந்த மற்றொரு கார்
டோனியின் புதிய பொம்மை என கார் படத்தை வெளியிட்ட சாக்ஷி சிங் டோனி.
5. கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும் சவுரவ் கங்குலி ஆதங்கம்
ராகுல் டிராவிட் விவகாரத்தில் கடவுள் தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்து உள்ளார்.