டோனி மீது ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம்


டோனி மீது ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 16 Jan 2019 1:38 PM IST (Updated: 16 Jan 2019 1:38 PM IST)
t-max-icont-min-icon

இந்திய அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் டோனியை விமர்சித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

அடிலெய்டு, 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 299 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் கோலி சதம் அடித்து அசத்தினார். இதன்பிறகு கடைசி கட்டத்தில், டோனி தனது  பணியை செவ்வனே செய்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். 
2 சிக்சர்கள் உட்பட 54 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்த டோனி, இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்று, தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

முன்னதாக, போட்டியின் 45-வது ஓவரில், டோனி ஒரு ரன் ஒடி எடுத்தார். அப்போது, எதிர்முனையில் உள்ள  கிரீசுக்குள் பேட்டை வைக்காமல் அப்படியே திரும்பிச்சென்றுவிட்டார். இதை போட்டி நடுவர்களும் கவனிக்கவில்லை. இந்த விவகாரத்தை சில ஆஸ்திரேலிய ஊடகங்கள், ஒரு ரன்னைக்கூட முழுமையாக ஓடி எடுக்க முடியாதவர் டோனி என விமர்சித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களும் டோனியை சரமாரியாக விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
1 More update

Next Story