கிரிக்கெட்

ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீதான இடைக்காலத்தடை : பிசிசிஐ புதிய முடிவு + "||" + Cancel ban on Hardik Pandya and KL Rahul:BCCI

ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீதான இடைக்காலத்தடை : பிசிசிஐ புதிய முடிவு

ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீதான இடைக்காலத்தடை : பிசிசிஐ புதிய முடிவு
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீதான இடைக்காலத்தடையை பிசிசிஐ திரும்பப்பெற்றது.
டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் பெண்களுடனான தங்களது பாலியல் பழக்கம் குறித்து வெளிப்படையாக கூறிய சில வி‌ஷயங்கள் சர்ச்சையாக கிளம்பியது. அவர்களது கருத்துக்கு பலரும் சமூக வலைதளங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் வாரியம் ஹர்திக் பாண்டியா,கே.எல்.ராகுல் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இடைக்காலதடை விதித்திருந்தது.

இந்நிலையில், இன்று வீரர்கள் மீதான இடைக்காலத்தடையை பிசிசிஐ திரும்பப்பெற்றது. மேலும் விசாரணை அதிகாரியை உச்சநீதிமன்றம் நியமித்த பின்னர், இருவர் மீதான விசாரணை தொடரும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.