வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து 77 ரன்னில் சுருண்டது


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து 77 ரன்னில் சுருண்டது
x
தினத்தந்தி 25 Jan 2019 9:00 PM GMT (Updated: 25 Jan 2019 7:55 PM GMT)

இங்கிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்து வருகிறது.

பிரிட்ஜ்டவுன், 

இங்கிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 289 ரன்களில் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்தை, எதிரணி வேகப்பந்து வீச்சாளர்கள் நிலைகுலைய வைத்தனர். குறிப்பாக கெமார் ரோச் 27 பந்துகளில் 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்து மிரட்டினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 30.2 ஓவர்களில் 77 ரன்னில் சுருண்டது. இந்த மைதானத்தில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். கேப்டன் ஜோ ரூட் (4 ரன்), பென் ஸ்டோக்ஸ் (0) உள்பட 6 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

அடுத்து 212 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2–வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. 3–வது நாளான நேற்று உணவு இடைவேளை வரை வெஸ்ட் இண்டீஸ் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. அப்போது அந்த அணி 6 விக்கெட்டுக்கு 237 ரன்களுடன் மொத்தம் 449 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியது. விக்கெட் கீப்பர் ஷேன் டாவ்ரிச் 61 ரன்களுடனும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 80 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.


Next Story