கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம் + "||" + Ricky Ponting appointed Australia assistant coach

ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்

ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்
ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிட்னி, 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்த டேவிட் சாகர் தனது பதவியில் இருந்து விலகி இருக்கிறார். இதைத்தொடர்ந்து உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரு நாள் தொடருக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியினருடன் ரிக்கி பாண்டிங் இணைகிறார். 2003 மற்றும் 2007-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங்கின் அனுபவம், அந்த அணியை வலுப்படுத்த உதவும். ஏற்கனவே ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக இருந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஆஸ்திரேலிய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும்’ - உதவி பயிற்சியாளர் பாண்டிங் நம்பிக்கை
ஆஸ்திரேலிய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என்று முன்னாள் கேப்டனும், உதவி பயிற்சியாளருமான ரிக்கிபாண்டிங் கூறியுள்ளார்.
2. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வி - ரோகித் சர்மாவின் சதம் வீண்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரோகித் சர்மா சதம் விளாசியும் பலன் இல்லை.
3. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கோலி, ரஹானே அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா
பெர்த்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரஹானே ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.
4. தொடர்ந்து பயமுறுத்தும் ஆஸ்திரேலிய வீரர்கள்; சிம்ம சொப்பனமாக விளங்குவாரா கோலி?
விராட் கோலிக்கு எதிராக நாங்கள் ரகசிய திட்டங்களை வைத்திருக்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.