கிரிக்கெட்

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி ரஷித்கான் உலக சாதனை + "||" + Rashid Khan world record of 4 wickets in 4 balls in international 20 over cricket

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி ரஷித்கான் உலக சாதனை

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி ரஷித்கான் உலக சாதனை
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி ரஷித்கான் உலக சாதனை படைத்தார்.
டேராடூன்,

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. முகமது நபி 81 ரன்கள் (36 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார். அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் ‘ஹாட்ரிக்’ உள்பட தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தியதும் அடங்கும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்கள் குவித்து உலக சாதனை - ஹஸ்ரத்துல்லா 16 சிக்சர் விளாசி அமர்க்களம்
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. அதில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா 16 சிக்சர் விளாசி அமர்க்களப்படுத்தினார்.