கிரிக்கெட்

கோலியை வீழ்த்த ஆலோசனை கொடுத்த இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யார்? அடம் ஸம்பா பதில் + "||" + Adam Zampa Names Former India All-Rounder Who Helped Him Dismiss Virat Kohli

கோலியை வீழ்த்த ஆலோசனை கொடுத்த இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யார்? அடம் ஸம்பா பதில்

கோலியை வீழ்த்த ஆலோசனை கொடுத்த இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யார்? அடம் ஸம்பா பதில்
கோலியை வீழ்த்த ஆலோசனை கொடுத்த இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யார்? என்பதை அடம் ஸம்பா விளக்கியுள்ளார்.

ஆஸ்திரேலியா சுழற்பந்து  பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். 26 வயதான ஸம்பா கோலியை முதல் டி20 போட்டியில் 24 ரன்னிலும், ஹைதராபாத் ஒருநாள் போட்டியில் 44 ரன்னிலும் வீழ்த்தினார். 

இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசகருமான ஸ்ரீதரன் ஸ்ரீராம் தான் உதவியாக இருந்ததாக கூறினார். 35 வயதான ஸ்ரீதரன் ஸ்ரீராம், இந்திய ஆடுகளங்களில் எப்படி பந்துவீச வேண்டும் என்று கூறியதாக ஸம்பா கூறினார். ஸம்பா, கோலியை 13 ஆட்டங்களில் 4 முறை அவுட் ஆக்கியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 2 முறை வீழ்த்தியுள்ளார். 

ஸ்ரீதரன் ஸ்ரீராமுக்கு அனுபவமும், இந்திய வீரர்களை பற்றிய அறிவும் உள்ளதாக தெரிவித்த ஸம்பா, மேலும் கூறும் போது, “ஸ்பின்னர்கள் மூலம் இந்தியாவை எதிர்கொள்ளும் உத்தியை ஸ்ரீதரன் ஸ்ரீராம் உருவாக்கி கொடுத்தார். இதேபோல் வீசிதான் கோலியின் விக்கெட்டை கைப்பற்றினேன்.

 கோலியை பற்றிதான் அதிகமாக அணியின் ஆலோசனை கூட்டத்தில் பேசுவோம். கோலி ஒரு சிறந்த, நம்பிக்கையளிக்கக்கூடிய வீரர்” என்றார் ஸம்பா. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 5வது ஒரு நாள் போட்டி; இந்தியாவுக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
2. 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கும் நாடுகள் அதிகரிப்பு
'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கும் நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.
3. 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
4. 3-வது ஒருநாள் போட்டி: 32 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 32 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.