கிரிக்கெட்

4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு + "||" + India will be without MS Dhoni, who has been rested for the last two ODIs

4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
மொகாலி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், 3–வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் போட்டி மொகாலியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்–இரவு மோதலாக நடக்கிறது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை பந்து வீசுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.  இந்தபோட்டியில் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் இந்தியாவும், தொடரை தக்க வைக்க ஆஸ்திரேலியாவும் போராடும் என்பதால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது. 

ஏற்கனவே அறிவித்தபடி இன்றைய போட்டியில் டோனி இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பாண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக முகம்மது சமி நீக்கப்பட்டு, புவனேஷ் குமார் அணியில் இடம் பிடித்துள்ளார். 

இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு
இந்தியா:

தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல், ரிஷாப் பாண்ட் (விக்கெட் கீப்பர்) கேதர் ஜாதவ், விஜய்சங்கர், புவனேஷ் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சகால், ஜஸ்பிரித் பும்ரா

ஆஸ்திரேலியா: 

உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல்,   ஆஸ்தன் டர்னர், , அலெக்ஸ் காரி, ஜெய ரிச்சர்டுசன், கம்மின்ஸ், ஜசன் பெண்டோர்ப், ஆடம் ஜம்பா.தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள்: மத்திய அரசு
பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2. வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: ஐ.எம்.எப்
உலகில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
3. இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது; மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? -உயர்நீதிமன்றம்
அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
4. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.
5. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு அளித்தோம்: சீனா
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான வகையில் செயல்பட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது.