கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு + "||" + IPL cricket competition Toss won Delhi team Elected to bat

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு
சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 5-வது லீக் போட்டி தொடங்கியது.

இதனையடுத்து டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

சென்னை-டெல்லி அணிகள் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் சென்னை அணி 12 முறையும், டெல்லி அணி 6 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), பிரித்வி ஷா, ஷிகர் தவான், காலின் இங்ராம், ரிஷாப் பான்ட், கீமோ பால், அக்‌ஷர் பட்டேல், ராகுல் திவேதியா, ரபடா, டிரென்ட் பவுல்ட், இஷாந்த் ஷர்மா.