கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதல் - வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்? + "||" + IPL Cricket: Kings XI Punjab - Hyderabad Sunrisers Conflict - Who Returns to Victory?

ஐ.பி.எல். கிரிக்கெட்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதல் - வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்?

ஐ.பி.எல். கிரிக்கெட்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதல் - வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்?
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோத உள்ளன.
மொகாலி,

இவ்விரு அணிகளும் தலா 3 வெற்றி, 2 தோல்வி என்று 6 புள்ளிகள் பெற்றுள்ளன. பஞ்சாப் அணி முந்தைய ஆட்டத்தில் சென்னையிடமும், ஐதராபாத் அணி கடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடமும் உதை வாங்கின. மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இவ்விரு அணிகளும் கோதாவில் குதிக்கின்றன. மொகாலி ஆடுகளம் எப்போதும் பஞ்சாப் அணிக்கு ராசியானது. கடந்த சீசனையும் சேர்த்து கடைசியாக இங்கு ஆடிய 6 ஆட்டங்களில் பஞ்சாப் வெற்றி கண்டிருக்கிறது.


ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ ஆகியோரைத் தான் மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்கள் தடுமாறினால் மிடில் வரிசை சீர்குலைந்து விடுகிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது. அதனால் இந்த முறை மிகுந்த கவனமுடன் ஆடுவார்கள். காயத்தால் ஓய்வு எடுத்து வரும் ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் இன்றைய ஆட்டத்திலும் களம் காண்பது சந்தேகம் தான். பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆடடத்தில் கிறிஸ் கெய்ல் (பஞ்சாப்), வார்னர் (ஐதராபாத்) ஆகியோரின் பேட்டிங் ஜாலத்தை காண ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: வாலிபர் கைது; ரூ.70.33 லட்சம் பணம் பறிமுதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆன்லைன் வழியே சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: 4-வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி “சாம்பியன்”
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் 1 ரன்கள் வித்தியாசத்தில், சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக மும்பை அணி “சாம்பியன்” பட்டம் வென்றது. #MIvsCSK
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை அணி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. #DCvsCSK
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றிபெற்றது. #MIvKKR
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி வெற்றியோடு வெளியேறியது பஞ்சாப் அணி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ஆறுதல் வெற்றியோடு போட்டியை விட்டு வெளியேறியது. #KXIPvCSK

ஆசிரியரின் தேர்வுகள்...