கிரிக்கெட்

கிரிக்கெட் சூதாட்ட புகார்: இலங்கை முன்னாள் வீரர்கள் ஜோய்சா, குணவர்த்தனே இடைநீக்கம் + "||" + Former Sri Lankan players Joey and Gunawardena suspended

கிரிக்கெட் சூதாட்ட புகார்: இலங்கை முன்னாள் வீரர்கள் ஜோய்சா, குணவர்த்தனே இடைநீக்கம்

கிரிக்கெட் சூதாட்ட புகார்: இலங்கை முன்னாள் வீரர்கள் ஜோய்சா, குணவர்த்தனே இடைநீக்கம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் ஜோய்சா, முன்னாள் பேட்ஸ்மேன் அவிஷ்கா குணவர்த்தனே ஆகியோரை சூதாட்ட புகாரின் பேரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று இடைநீக்கம் செய்தது.

துபாய், 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் ஜோய்சா, முன்னாள் பேட்ஸ்மேன் அவிஷ்கா குணவர்த்தனே ஆகியோரை சூதாட்ட புகாரின் பேரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று இடைநீக்கம் செய்தது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 10 ஓவர் லீக் போட்டியில் பங்கேற்ற அவர்கள் இருவர் மீதும் எழுந்த சூதாட்ட புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான புகார் என்ன? என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. தங்கள் மீதான புகாருக்கு 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும் படி இருவரும் உத்தரவிடப்பட்டுள்ளது. நுவான் ஜோய்சா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சூதாட்ட புகார் காரணமாக ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் ஒன்றியத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக புகார் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இருந்து அனைத்துக்கட்சியினர் வெளிநடப்பு
திருப்பூர் ஒன்றியத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து, திருப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இருந்து அனைத்து கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
2. பணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட தொழில்துறையினர் ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் புகார் தெரிவித்தால் விரைந்து நடவடிக்கை விழிப்புணர்வு கூட்டத்தில் தலைவர் பேச்சு
வியாபாரிகளிடம் இருந்து பணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட தொழில்துறையினர் ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் புகார் தெரிவித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, விழிப்புணர்வு கூட்டத்தில் அதன் தலைவர் கருணாநிதி பேசினார்.
3. நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் தரம் குறைவு என புகார்: அம்மா உணவகத்துக்கு கொண்டு சென்ற 48 குடிநீர் கேன்கள் பறிமுதல்
பவானி நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் தண்ணீரின் தரம் குறைவாக உள்ளதாக புகார் கொடுத்ததன் எதிரொலியால் அம்மா உணவகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட 48 குடிநீர் கேன்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
4. ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.11¼ லட்சம் மோசடி ராணுவவீரர் உள்பட 3 பேர் மீது புகார்
ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.11¼ லட்சம் மோசடி ராணுவவீரர் உள்பட 3 பேர் மீது புகார் மனு அளிக்கப்பட்டது.
5. பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி வெற்றி
இங்கிலாந்து–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் நடந்தது.