கிரிக்கெட்

மும்பை அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் ஜெயவர்த்தனே பாராட்டு + "||" + Coach Jayawardene congratulates Mumbai Indians Players

மும்பை அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் ஜெயவர்த்தனே பாராட்டு

மும்பை அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் ஜெயவர்த்தனே பாராட்டு
மும்பை அணி வீரர்களுக்கு, அந்த அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி வீரர்களுக்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே டுவிட்டரில் வீடியோ மூலம் பாராட்டு தெரிவித்து இருக்கிறார். அதில், ‘கடினமான கட்டத்திலும் எங்கள் அணியினர் விடாமுயற்சியுடன் போராடினார்கள். எங்கள் அணி வீரர்கள் தவறு செய்தார்கள். ஆனால் அந்த சரிவில் இருந்து மீண்டு வந்தார்கள். அது தான் முக்கியமானது. எல்லா வீரர்களும் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்தனர். எங்கள் அணியினர் யாரும் ஆரஞ்சு நிற தொப்பியோ (அதிக ரன் குவிப்பவருக்கு வழங்கப்படுவது), ஊதா நிற தொப்பியோ (அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கு அளிக்கப்படுவது) பெறவில்லை. அதில் யார் கவனம் செலுத்தினார்களோ? அவர்கள் அதனை பெற்று இருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மும்பை அணியினர் தங்கள் வெற்றியை விசேஷ திறந்த வெளி பஸ்சில் பயணித்து கொண்டாட இருக்கிறார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளராக கிரஹாம் நியமனம்
இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளராக கிரஹாம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. தொடர் தோல்வி எதிரொலி: இலங்கை அணியின் பயிற்சியாளர் ஹதுருசின்காவை நீக்க முடிவு?
தொடர் தோல்வி எதிரொலியாக, இலங்கை அணியின் பயிற்சியாளர் ஹதுருசின்காவை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. பெண்கள் அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் கமிட்டி
பெண்கள் அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.