கிரிக்கெட்

ஜாசன் ராய், மோர்கன் காயம் + "||" + Jason Roy, Morgan Injury

ஜாசன் ராய், மோர்கன் காயம்

ஜாசன் ராய், மோர்கன் காயம்
இங்கிலாந்து வீரர்களான ஜாசன் ராய், மோர்கன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
சவுதம்டன்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய்க்கு, பந்தை பிடிக்க ஓடிய போது இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் 8-வது ஓவரில் மைதானத்தை விட்டு வெளியேறி சிகிச்சை பெற்ற அவர் அதன் பிறகு பீல்டிங் செய்ய வரவில்லை. இதே போல் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதுகுவலியால் 40-வது ஓவரில் பெவிலியன் திரும்பினார். இவ்விரு அதிரடி வீரர்களின் காயம் காரணமாக இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஜாசன் ராய்க்கு பதிலாக ஜோ ரூட் தொடக்க வீரராக இறங்கினார்.