விராட் கோலி பேட்டிங் செய்யும் வீடியோ காட்சிகளை பார்த்து பயிற்சியில் ஈடுபடும் பாக்.வீரர் பாபர் ஆசம்


விராட் கோலி பேட்டிங் செய்யும் வீடியோ காட்சிகளை பார்த்து பயிற்சியில் ஈடுபடும் பாக்.வீரர் பாபர் ஆசம்
x
தினத்தந்தி 15 Jun 2019 6:17 AM GMT (Updated: 15 Jun 2019 6:17 AM GMT)

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி, பேட்டிங் செய்யும் வீடியோ காட்சிகளை பார்த்து, பாக்.வீரர் பாபர் ஆசம் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மான்செஸ்டர், 

உலக கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்று, இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி.  நாளை இரு அணிகளும் மோதும் இந்தப் போட்டிக்கு விறுவிறுப்புக்கு எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது.

ஓல்ட் டிராபோர்ட்  மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்காக இரு நாடுகளைச் சேர்ந்த அணி வீரர்களும் தீவிரமாகத் தயாராகி வருகிறார்கள். ஆசியக்கோப்பை போட்டிக்குப் பின் இப்போது மீண்டும் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதுகிறது. 

இதற்கிடையே பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் வீடியோக்களை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பார்த்து வருகிறார். கோலி எவ்வாறு பேட் செய்கிறார், ஷாட்களை எவ்வாறு அடிக்கிறார், பந்தை எப்படிக் கையாள்கிறார் என்று கவனித்து அதேபோலவே பாபர் ஆசம்  பயிற்சி எடுத்து வருகிறார். 

இதுகுறித்து பாபர் ஆசம் நிருபர்களிடம் கூறுகையில், விராட் கோலியின் பேட்டிங்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீடியோவில் பார்த்தேன். பல்வேறு சூழல்களில் எவ்வாறு பேட் செய்கிறார் என்பதைக் கூர்ந்து கவனித்து அதைப் போலவே நானும் பயிற்சி எடுத்து வருகிறேன். கோலியின் வெற்றி சதவீதம் மலைப்பாக இருக்கிறது. அதைப் போலவை நானும் பேட் செய்து பின்பற்ற நினைக்கிறேன்” என்றார். 

24வயதான  பாபர் ஆசம் இதுவரை 67 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 9 சதங்கள், 13 அரை சதங்கள் என மொத்தம் 2,854 ரன்கள் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story