கிரிக்கெட்

பயிற்சியின் போது பந்து தாக்கி விஜய் சங்கர் காயம் + "||" + Hitting the ball during training Vijay Shankar injured

பயிற்சியின் போது பந்து தாக்கி விஜய் சங்கர் காயம்

பயிற்சியின் போது பந்து தாக்கி விஜய் சங்கர் காயம்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் நேற்று முன்தினம் சவுதம்டனில் பயிற்சியில் ஈடுபட்ட போது சக வீரர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்து அவரது கால் பெருவிரலில் தாக்கியது.

சவுதம்டன், 

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் நேற்று முன்தினம் சவுதம்டனில் பயிற்சியில் ஈடுபட்ட போது சக வீரர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்து அவரது கால் பெருவிரலில் தாக்கியது. இதில் வலியால் துடித்த விஜய் சங்கர் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. இருப்பினும் விஜய் சங்கர் நல்ல நிலையில் இருப்பதாக பும்ரா தெரிவித்துள்ளார். விஜய் சங்கர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தனது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காயம் லேசானது என்றாலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் விஜய் சங்கர் ஆடுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் போல் நடித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களை தாக்கி நகை, செல்போன்கள் பறிப்பு; ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டல்
போலீஸ் போல் நடித்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களை வீடு புகுந்து தாக்கி நகை, செல்போன்களை பறித்து சென்றதுடன், ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
2. உத்திரமேரூர் அருகே பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
உத்திரமேரூர் அருகே பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி ஈரோடு கருங்கல்பாளையம் தம்பதி பரிதாப சாவு; டிரைவர் கைது
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி கருங்கல்பாளையம் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
4. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர், தலீபான்கள் மோதலில் 19 பேர் பலி; மற்றொரு தாக்குதலில் 25 பேர் சாவு
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தொடர்ந்து பாதுகாப்பு படையினரையும், போலீசாரையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
5. ஈராக்கில் வான்தாக்குதலில் 18 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை, அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து ஈராக் ராணுவம் விரட்டியடித்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...