கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கிண்டல் செய்யும் வீடியோ வெளியிட்ட நடிகர் விவேக் ஓபராய் + "||" + This is what happened to Indian fans in the WC semi finals!- Vivek Anand Oberoi ‏

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கிண்டல் செய்யும் வீடியோ வெளியிட்ட நடிகர் விவேக் ஓபராய்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கிண்டல் செய்யும் வீடியோ வெளியிட்ட நடிகர் விவேக் ஓபராய்
இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் நடிகர் விவேக் ஓபராய்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியிடம், இந்திய அணி போராடி தோற்றது. இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்திய அணியின் தோல்வியில் இருந்து இன்னும் ரசிகர்கள் மீளாத நிலையில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார் ஒபராய் .

அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், உலகக்கோப்பை அரைஇறுதிப் போட்டியில் இந்திய அணியின் ரசிகர்களுக்கு இப்படிதான் ஆகிப்போனது என்று கருத்து தெரிவித்துள்ளதோடு, gif புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் வெளிநாட்டு பெண்மணி ஒருவர் இந்தியர் ஒருவரை கட்டிப்பிடிக்க வருவது போன்று நடிக்க, இந்தியரும் தன்னைதான் அவர் கட்டிப்பிடிக்க வருகிறார் என்று நினைத்து அந்த பெண்மணியை கட்டி பிடிக்கும் போது, அவர் பின்னால் இருந்து ஒரு வெளிநாட்டு ஆண் அந்த பெண்மணியை கட்டிபிடிக்கிறார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அசடு வழிந்தவாறே கடந்து செல்வார் இந்தியர். அந்த Prank ரக வீடியோவை பயன்படுத்தி தான் இந்திய ரசிகர்களை கிண்டல் செய்திருக்கிறார் ஓபராய்.