கிரிக்கெட்

2-வது வெற்றியை பெறுவது யார்? சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணிகள் இன்று மோதல் + "||" + Chepauk Super Gillies - Karaikudi bull teams clash today

2-வது வெற்றியை பெறுவது யார்? சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணிகள் இன்று மோதல்

2-வது வெற்றியை பெறுவது யார்? சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணிகள் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 2-வது வெற்றி பெறும் உத்வேகத்துடன் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று காரைக்குடி காளையுடன் மோதுகிறது.
நெல்லை, 

4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லை மற்றும் நத்தம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

நெல்லையில் இன்று நடக்கும் 9-வது லீக் ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பா கில்லீஸ் அணி, அனிருதா தலைமையிலான காரைக்குடி காளையை சந்திக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அடுத்த ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை 41 ரன்கள் வித்தியாசத்தில் பதம் பார்த்தது. சேப்பாக் அணியில் கோபிநாத், ஹரிஷ்குமார் முந்தைய ஆட்டத்தில் அதிரடியில் அசத்தினர். ஆனால் கேப்டன் கவுசிக் காந்தி இரண்டு ஆட்டத்திலும் ஒற்றை இலக்கத்தை (0,1) தாண்டவில்லை. அணியின் பேட்டிங் வலுப்பெற அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும்.

பந்து வீச்சில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அலெக்சாண்டர் மிரட்டுகிறார். 2 ஆட்டங்களையும் சேர்த்து அவர் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் அவர் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தும் வேட்கையில் உள்ளார். அவருக்கு முருகன் அஸ்வின், பெரியசாமி பக்கபலமாக உள்ளனர்.

காரைக்குடி அணி எப்படி?

காரைக்குடி காளை அணி தனது தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவர் வரை போராடி திருச்சி வாரியர்சை வென்றது. 2-வது ஆட்டத்தில் காஞ்சி வீரன்சுக்கு எதிராக வெறும் 67 ரன்னில் சுருண்டது. டி.என்.பி.எல். போட்டியில் காரைக்குடி அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். அந்த அணியில் கேப்டன் அனிருதா, சூர்யபிரகாஷ், பாப்னா, ராஜ்குமார், ஷாஜகான் உள்ளிட்டோர் பேட்டிங்கில் நன்றாக ஆடக்கூடியவர்கள். சரிவில் இருந்து எழுச்சி பெறும் முனைப்புடன் அவர்கள் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 2-ல் கில்லீசும், ஒன்றில் காளையும் வெற்றி கண்டுள்ளன.

ஏறக்குறைய சமபலம் வாய்ந்த இரு அணிகளும் 2-வது வெற்றிக்கு வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.