கிரிக்கெட்

உலக கோப்பை வெளியேற்றத்தால் ஒவ்வொரு நாளும் வேதனைப்பட்டோம் இந்திய கேப்டன் கோலி பேட்டி + "||" + If the World Cup kicks off We were in pain every day

உலக கோப்பை வெளியேற்றத்தால் ஒவ்வொரு நாளும் வேதனைப்பட்டோம் இந்திய கேப்டன் கோலி பேட்டி

உலக கோப்பை வெளியேற்றத்தால் ஒவ்வொரு நாளும் வேதனைப்பட்டோம் இந்திய கேப்டன் கோலி பேட்டி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் தோற்று வெளியேறிய பிறகு சில நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது.

புளோரிடா,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் தோற்று வெளியேறிய பிறகு சில நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. உலக கோப்பை முடிவடையும் வரை ஒவ்வொரு நாள் காலை விடியும் போதும் மிக மோசமானதாகவே உணர்ந்தோம். அந்த வேதனையில் இருந்து மீண்டு வரவே சிரமப்பட்டோம். ஆனால் நாங்கள் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள். நடந்ததை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் அடுத்த கட்டத்துக்கு முன்னேற அதை விட்டு நகர்ந்து செல்ல வேண்டும். இப்போது எங்களது கவனம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தான் இருக்கிறது.

இவ்வாறு கோலி கூறினார்.