கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: 93 ரன்களில் சுருண்டது காரைக்குடி காளை + "||" + TNPL Cricket Curled in 93 runs Karaikudi Kalai

டி.என்.பி.எல். கிரிக்கெட்: 93 ரன்களில் சுருண்டது காரைக்குடி காளை

டி.என்.பி.எல். கிரிக்கெட்: 93 ரன்களில் சுருண்டது காரைக்குடி காளை
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை அணி மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 94 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் காரைக்குடி காளை அணிகளுக்கு இடையேயான 26-லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற காரைக்குடி காளை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து காரைக்குடி காளை அணியின் தொடக்க வீரர்களாக ஆதித்யா மற்றும் அனிருதா ஆகியோர் களமிறங்கினர். இதில் அனிருதா 13 ரன்னிலும், அடுத்து வந்த மான் பாப்னா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதற்கு பின் ஆதித்யா 14 ரன்னிலும், யோ மகேஷ் 7 ரன்னிலும், ஷாஜகான் 6 ரன்னிலும், அஸ்வின் பாலாஜி 11 ரன்னிலும், அஸ்வின் குமார் ரன் எதுவும் எடுக்காமலும், கணேஷ் 14 ரன்னிலும், சுனில் சாம் 8 ரன்னிலும், அஷ்வத்  6 ரன்னிலும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து நடையை கட்டினர்.

இறுதியில் காரைக்குடி காளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்கள் எடுத்துள்ளது. கடைசியில் மோகன் பிரசாத் 7 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

மதுரை பாந்தர்ஸ் அணியில் ரஹில் ஷா மற்றும் கிரண் ஆகாஷ் 3 விக்கெட்டுகளும், செல்வகுமரன் 2 விக்கெட்டுகளும், ஆர்.மிதுன் 1 விக்கெட்டும்  வீழ்த்தினர்.

இதனையடுத்து 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்க உள்ளது.