விராட் கோலி - ரோகித் சர்மா மோதலுக்கு யார் காரணம்? -சுனில் கவாஸ்கர்


விராட் கோலி - ரோகித் சர்மா மோதலுக்கு யார் காரணம்? -சுனில் கவாஸ்கர்
x
தினத்தந்தி 10 Aug 2019 12:09 PM GMT (Updated: 10 Aug 2019 12:09 PM GMT)

இந்திய கேப்டன் கோலி- துணைத்தலைவர் ரோகித் மோதலுக்கு காரணமானவர்கள் குறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

சுனில் கவாஸ்கர் கூறியதாவது, கோலி-ரோகித் பிளவு தொடர்பான வதந்திகள் 20 ஆண்டுகளுக்கு பின்னரும் நிறுத்தப்படாது. இருவரும் தொழில் வல்லுநர்கள், அதனால் இதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்ளாமல் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தவார்கள். ஆனால், வதந்திகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் நிறுத்தப்படாது.

இதுபோன்ற கதைகள் உருவாக்கப்படுவதற்கு சில நேரங்களில் அணியில் இடம்கிடைக்காததால் விரக்தியடைந்த வீரர் காரணமாக இருப்பார் என சுட்டிக்காட்டிய கவாஸ்கர், இதை ஆரம்பித்துவிட்டவர், கண்டிப்பாக இந்திய கிரிக்கெட் நல்லா இருக்கக்கூடாது என்று நினைத்தவராகத்தான் இருப்பார்.

அப்படி விரக்தியடைந்த வீரர் இல்லை என்றால், அணிக்கு தீங்கு விளைவிக்கும் இந்த வதந்தியை யார் உருவாக்கி இருப்பார்கள்? பின்னர் நிச்சயமாக சொந்த அரசியில் விளையாட்டை விளையாடுவதற்காக சில நிர்வாகிகள் இவ்வாறு செய்திருப்பார்கள் என கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். 

இதுவரை இந்த வதந்திகள் குறித்து ரோகித் வாய் திறக்காத நிலையில், சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய கேப்டன் கோலி, ரோகித்துடன் எந்த மோதலும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Next Story