இளைஞர்களுக்கு இலவசமாக கிரிக்கெட் பயிற்சி - டோனி திட்டம்


இளைஞர்களுக்கு இலவசமாக கிரிக்கெட் பயிற்சி - டோனி திட்டம்
x

ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்கி இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க டோனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


* தற்போது ராணுவ வீரர்களுடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் இந்திய கிரிக்கெட் வீரர் டோனி, வருங்காலத்தில் ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்கி இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) தங்கள் மையத்தில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு உதவிடும் கையில் ஊட்டச்சத்து நிபுணரையும், மேலும் சில பணியாளர்களையும் நியமிக்க முடிவு செய்துள்ளது.

* இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டேவிஸ்கோப்பை டென்னிஸ் போட்டி அடுத்த மாதம் 14 மற்றும் 15-ந்தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடக்க உள்ளது. ஆனால் தற்போது இரு நாட்டு உறவில் பதற்றம் நிலவுவதால் இந்த போட்டியை பொதுவான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற இந்திய டென்னிஸ் சங்கத்தின் கோரிக்கையை பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் நிராகரித்துள்ளது. ‘இந்த ஆட்டம் திட்டமிட்டப்படி நடக்கும். இஸ்லாமாபாத் பாதுகாப்பான நகரம். இந்திய வீரர்களுக்கு உயர்மட்ட பாதுகாப்பு அளிக்கப்படும்’ என்று பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளன தலைவர் சலீம் சாய்புல்லா கூயுள்ளார்.

* ‘பேட்டிங்கில் குறிப்பிட்ட வரிசையில் தான் ஆடுவேன் என்று சொல்லமாட்டேன். சூழ்நிலைக்கு தகுந்தபடி எந்த வரிசையிலும் என்னால் விளையாட முடியும்’ என்று இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.


Next Story