கிரிக்கெட்

நியூசிலாந்து அணியின் சரிவை தடுத்தார், டெய்லர் + "||" + Prevented the collapse of the New Zealand team, Taylor

நியூசிலாந்து அணியின் சரிவை தடுத்தார், டெய்லர்

நியூசிலாந்து அணியின் சரிவை தடுத்தார், டெய்லர்
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை சரிவில் இருந்து டெய்லர் காப்பாற்றினார்.
காலே,

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 68 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்தது. இதனால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அணியை சரிவில் இருந்து காப்பாற்றிய முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் 86 ரன்களுடனும் (131 பந்து, 6 பவுண்டரி), சான்ட்னெர் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். கேப்டன் வில்லியம்சன் டக்-அவுட் ஆனார். இலங்கை தரப்பில் 5 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா அள்ளினார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.ஆசிரியரின் தேர்வுகள்...