கிரிக்கெட்

ஆஷஸ் டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினார் + "||" + Ashes Test: Ben Stokes made a century

ஆஷஸ் டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினார்

ஆஷஸ் டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினார்
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினார்.
லண்டன்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 258 ரன்களும், ஆஸ்திரேலியா 250 ரன்களும் எடுத்தன. 8 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. தனது 7-வது சதத்தை பூர்த்தி செய்த பென் ஸ்டோக்ஸ் 115 ரன்களுடன் (165 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார்.இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 267 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 36 ஓவர் முடிந்திருந்த போது 4 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக லபுஸ்சேன் 59 ரன்கள் எடுத்தார். வார்னர் 5 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.