கிரிக்கெட்

ராகுல் டிராவிட்டின் ஆலோசனையை கடைப்பிடித்து வருகிறேன்சுப்மான் கில் பேட்டி + "||" + I am following the advice of Rahul Dravid Interview with Subman Gill

ராகுல் டிராவிட்டின் ஆலோசனையை கடைப்பிடித்து வருகிறேன்சுப்மான் கில் பேட்டி

ராகுல் டிராவிட்டின் ஆலோசனையை கடைப்பிடித்து வருகிறேன்சுப்மான் கில் பேட்டி
பஞ்சாப்பை சேர்ந்த 19 வயதான சுப்மான் கில் அந்த போட்டியில் சோபிக்காவிட்டாலும், அதன் பிறகு நடந்த ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
புதுடெல்லி, 

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் 2 ஆட்டங்களில் இந்திய அணியில் இடம் பிடித்த பஞ்சாப்பை சேர்ந்த 19 வயதான சுப்மான் கில் அந்த போட்டியில் சோபிக்காவிட்டாலும், அதன் பிறகு நடந்த ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் (ஆட்டம் இழக்காமல் 204 ரன்கள்) அடித்து அசத்தினார். அத்துடன் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 3 அரைசதம் அடித்தார். இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் சுப்மான் கில் அளித்த ஒரு பேட்டியில், ‘19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி மற்றும் இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஆலோசனை வழங்கும் போது, வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்றால் ஒருபோதும் உங்களுடைய அடிப்படை ஆட்டத்தை மாற்றக்கூடாது என்று கூறுவார். அத்துடன் தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தி கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அடிப்படை ஆட்டத்தின் வரைமுறைக்கு உட்பட்டே நுணுக்கங்களை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் சொல்வார். மேலும் சவாலை திறம்பட கையாள மனரீதியாக வலுவாக செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்து சொல்வார். அதனை எப்பொழுதும் எனது மனதில் கொண்டு செயல்பட்டு வருகிறேன். வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான தொடர் எனது நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான தொடரில் பெரிய ஸ்கோர் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். நெருக்கடியை கையாள்வது எப்படி? என்பது குறித்து யுவராஜ்சிங் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார்’ என்று தெரிவித்தார்.