கிரிக்கெட்

தோனியால் நீண்ட காலம் விளையாட முடியாது என்பதே நிதர்சனம்: கங்குலி + "||" + MS Dhoni has to evaluate where he stands: Sourav Ganguly

தோனியால் நீண்ட காலம் விளையாட முடியாது என்பதே நிதர்சனம்: கங்குலி

தோனியால் நீண்ட காலம் விளையாட முடியாது என்பதே நிதர்சனம்: கங்குலி
தோனியால் நீண்ட காலம் விளையாட முடியாது என்பதே நிதர்சனம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா, 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான தோனி மீது சமீப காலமாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருந்து தானாக  தோனி விலகிக் கொண்டார். இதனால் அவருக்கு பதிலாக ரிஷப் பாண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். 

இந்த நிலையில், தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த கங்குலி, டோனி பற்றி கூறியதாவது:- “ டோனி இந்திய அணிக்காகத் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருக்க மாட்டார் என்ற உண்மையை இந்திய கிரிக்கெட் அணி உணர்ந்துகொள்ள வேண்டும். காரணம் அவரால் நீண்ட காலம் விளையாட முடியாது என்பதே நிதர்சனம். ஆனால், அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும். எல்லா பெரிய வீரரும் ஒரு நாள் ஓய்வு பெற்றுத்தான் ஆக வேண்டும். 

தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில், தான் எங்கு இருக்கிறோம் என மதிப்பீடு செய்யும் கட்டத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். தன்னால் இனி இந்திய அணியை வெற்றிபெற வைக்க முடியுமா என்பதை அவர் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். 

தோனி, கோலி, டெண்டுல்கர் போன்ற வீரர்கள் விளையாடிக்கொண்டு இருக்கும் வரை அவர்கள் மீதான எதிர்பார்ப்பும் இருந்துகொண்டேதான் இருக்கும். அவர்கள் எப்போதும் போல் அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். எனினும் தோனி மட்டுமே இதில் முடிவெடுக்க தகுதியானவர். காரணம் தன்னிடம் இன்னும் எத்தனை சக்தி இருக்கிறது என்பதை அவர் ஒருவரே அறிவார்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது: தந்தை ஆனார், ஹர்திக் பாண்ட்யா
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
2. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைவு- பிரதமர் மோடி - பிரபலங்கள் இரங்கல்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி திரையுலக, விளையாட்டு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
3. தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம்
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...