கிரிக்கெட்

புரோ கபடி: பெங்கால் அணியிடம் மும்பை தோல்வி + "||" + Pro Kabaddi: Mumbai defeat to Bengal team

புரோ கபடி: பெங்கால் அணியிடம் மும்பை தோல்வி

புரோ கபடி: பெங்கால் அணியிடம் மும்பை தோல்வி
புரோ கபடி போட்டியில், பெங்கால் அணியிடம் மும்பை அணி தோல்வியடைந்தது.
கொல்கத்தா,

12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற 85-வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-மும்பை அணிகள் மோதின. தொடக்கத்தில் பெங்கால் அணி, மும்பையை ‘ஆல்-அவுட்’ செய்தது. முதல் பாதியில் பெங்கால் அணி 16-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கடைசி வரை மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. ஆட்டத்தின் முடிவில் பெங்கால் அணி 29-26 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. 15-வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் அணி பெற்ற 8-வது வெற்றியாகும். 15-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும். முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் சந்தித்தன. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமநிலை) முடிந்தது.


இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-பாட்னா பைரட்ஸ் (இரவு 7.30 மணி), பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தியது ஐதராபாத்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கேரளா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணி வீழ்த்தியது.
2. தேவேந்திர பட்னாவிஸ் வரும் வெள்ளிக்கிழமை முதல் மந்திரியாக பதவியேற்கலாம் எனத்தகவல்
தேவேந்திர பட்னாவிஸ் வரும் வெள்ளிக்கிழமை முதல் மந்திரியாக பதவியேற்கலாம் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. தென்ஆப்பிரிக்காவை ஊதித்தள்ளியது: கடைசி டெஸ்டிலும் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
ராஞ்சியில் நடந்த கடைசி டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்காவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் ஊதித்தள்ளிய இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.
4. புரோ கபடியில் மகுடம் சூடப்போவது யார்? பெங்கால்-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை
புரோ கபடி போட்டியில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பெங்கால்-டெல்லி அணிகள் மோதுகின்றன.
5. புரோ கபடி போட்டி: இறுதிப்போட்டியில் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ்
புரோ கபடியில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.