கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட்: சுப்மான் கில், கருண் நாயர் அரைசதம் + "||" + Test against South Africa 'A' - Subman Gill, Karun Nair half a century

தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட்: சுப்மான் கில், கருண் நாயர் அரைசதம்

தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட்: சுப்மான் கில், கருண் நாயர் அரைசதம்
தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சுப்மான் கில், கருண் நாயர் ஆகியோர் தங்களது அரைசதத்தை பதிவு செய்தனர்.
மைசூரு,

இந்தியா ‘ஏ’-தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கர்நாடகா மாநிலம் மைசூருவில் நேற்று தொடங்கியது. தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணி ‘டாஸ்’ ஜெயித்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யூ ஈஸ்வரன் 5 ரன்னிலும், பிரியங்க் பன்சால் 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் 137 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 92 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆனார்.


ஆட்ட நேரம் முடிவில் இந்திய ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 74 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. கருண்நாயர் 78 ரன்னுடனும் (167 பந்து, 10 பவுண்டரி), கேப்டன் விருத்திமான் சஹா 36 ரன்னுடனும் (86 பந்து, 5 பவுண்டரி) களத்தில் இருக்கிறார்கள். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.