கிரிக்கெட்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அப்ரிடி பாராட்டு + "||" + Shahid Afridi Applauds Virat Kohli After Again He Achieves Average Of 50 In All Three Formats

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அப்ரிடி பாராட்டு

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அப்ரிடி பாராட்டு
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இஸ்லமபாத், 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 52 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அசத்தினார். 

விராட் கோலி  டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை நேற்று பெற்றார். டி20 போட்டியில் அவர், 2,441 ரன்கள் குவித்துள்ளார். இதில் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் அவர் 22 அரைசதங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல், 3 வகையான போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி பெற்றுள்ளார். விராட் கோலியின் இந்த சாதனைப் பட்டியலை ஐசிசி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது.

ஐசிசியின் டுவிட்டுக்கு ரீ-டுவிட் செய்த அப்ரிடி, "வாழ்த்துக்கள் விராட் கோலி நீங்கள் ஒரு சிறந்த வீளையாட்டு வீரர். தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள். உலகத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய செய்யுங்கள்." என்று பதிவிட்டார்.

ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்து விராட் கோலி டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மூன்று வடிவங்களிலும் சராசரியாக 50-க்கு மேல் உள்ள ஒரே சமகால பேட்ஸ்மேன் விராட் கோலி மட்டும்தான்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று: பாகிஸ்தானில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா தொற்று காரணமாக பாகிஸ்தானில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை தற்போது 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
2. "இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் கருத்து
இந்தியாவிற்கும், சீனாவிற்கு இடையே நடக்கும் மோதலால் பெரிய ஆபத்து வரப் போவதாக பாகிஸ்தான் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.
3. சீனாவின் தந்திரம் :ஒரே நேரத்தில் இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தும் மூன்று நாடுகள்
ஒரே நேரத்தில் இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தும் மூன்று நாடுகள் விவகாரத்தில் பிரதமர் மோடி என்ன முடிவு எடுக்கப்போகிறார்...?
4. ரகசிய குறியீட்டை சுமந்து கொண்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பறந்து வந்த ‘உளவு புறா’
ரகசிய குறியீட்டை சுமந்து கொண்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ‘உளவு புறா’ ஒன்று பறந்து வந்துள்ளது.
5. கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள்: பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான் கான் அறிவுறுத்தல்
கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.