கிரிக்கெட்

தனது 16 வயது புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி + "||" + Virat Kohli posted his 16 year old photo

தனது 16 வயது புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி

தனது 16 வயது புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி
இந்திய கேப்டன் விராட் கோலி தனது 16 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 52 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அசத்தினார். 

மேலும் விராட் கோலி  20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை  பெற்றார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அவர், 2,441 ரன்கள் குவித்துள்ளார். இதில் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் அவர் 22 அரைசதங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல், 3 வகையான போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு  விராட் கோலி விளையாட தொடங்கினார். அதற்கு முன்பாக இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது விராட் கோலி தன்னுடைய 16 வயதில் எடுத்த புகைப்படத்தையும், சமீபத்தில் எடுத்த புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  

விராட் கோலி பதிவிட்ட இந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட் மற்றும் ஷேர் செய்து வருகிறார்கள். இது மட்டுமல்லாது  இளம் வயது முதல் தற்போது வரை அவரது உருவத்தில் மட்டுமல்லாது, திறமையிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. விராட் கோலி பந்து வீச்சாளர்களின் கேப்டன் என சோயிப் அக்தர் பாராட்டு
விராட் கோலி பந்து வீச்சாளர்களின் கேப்டன் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பாராட்டி உள்ளார்.
2. டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படும் - இந்திய கேப்டன் கோலி பேட்டி
டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக முதல்முறையாக கால்பதிக்கும் ரோகித் சர்மாவுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார்.
3. கங்குலியை போல் செயல்படுகிறார், கோலி - ஜாகீர்கான் சொல்கிறார்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கங்குலியை போல் செயல்படுகிறார் என ஜாகீர்கான் சொல்கிறார்.
4. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அப்ரிடி பாராட்டு
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
5. டிக் டாக் மூலம் பிரபலமாகும் விராட் கோலி போல் இருக்கும் கவுரவ் அரோரா
டிக் டாக் மூலம் பிரபலமாகும் விராட் கோலி உருவ ஒற்றுமையுடன் இருக்கும் கவுரவ் அரோரா.