கிரிக்கெட்

காயத்தால் அவதிப்படும் ஹர்திக் பாண்ட்யா - வங்காளதேச தொடரில் ஆட முடியாது + "||" + Hartik Pandya suffering from injury - Can't Play in Bangladesh series

காயத்தால் அவதிப்படும் ஹர்திக் பாண்ட்யா - வங்காளதேச தொடரில் ஆட முடியாது

காயத்தால் அவதிப்படும் ஹர்திக் பாண்ட்யா - வங்காளதேச தொடரில் ஆட முடியாது
காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா அவதிப்பட்டு வருகிறார். இதனால் வங்காளதேச தொடரில் ஆட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முதுகின் அடிப்பகுதியில் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி அவர் இங்கிலாந்துக்கு சென்று சிறப்பு நிபுணரிடம் ஆலோசனை கேட்க உள்ளார். ஏற்கனவே ஆசிய கிரிக்கெட்டின் போது இத்தகைய காயத்தில் சிக்கி, அதே நிபுணரிடம் தான் சிகிச்சை பெற்றார். தற்போதைய சூழலில் அவரால் அடுத்து வரும் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாட முடியாது. அனேகமாக அவர் நீண்ட காலம் ஓய்வு எடுக்க வேண்டி வரலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.தொடர்புடைய செய்திகள்

1. சிறு குழந்தையின் நடைகள்... காயத்தில் இருந்து மீண்டு வரும் வீடியோவை வெளியிட்ட ஹர்திக் பாண்ட்யா
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா காயத்தில் இருந்து மீண்டு வரும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.