‘ஐ.சி.சி.யின் முடிவை எதிர்ப்போம்’-அருண் துமால்


‘ஐ.சி.சி.யின் முடிவை எதிர்ப்போம்’-அருண் துமால்
x
தினத்தந்தி 24 Oct 2019 10:56 PM GMT (Updated: 24 Oct 2019 10:56 PM GMT)

ஐ.சி.சி.யின் முடிவை எதிர்ப்போம் என அருண் துமால் தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய பொருளாளர் அருண் துமால் அளித்த ஒரு பேட்டியில், ‘சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) வருங்கால போட்டி அட்டவணை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் எதுவும் சொல்லாமல் இருக்க முடியுமா? அதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஏனெனில் இந்திய கிரிக்கெட்டின் பிரதான பங்களிப்பு இல்லாமல் ஐ.சி.சி.யால் எப்படி செயல்பட முடியும். எனவே கூடுதலாக போட்டிகளை நடத்த ஐ.சி.சி. முன்மொழிந்துள்ள திட்டத்தை நாங்கள் ஏற்கமாட்டோம். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருவாயை பெருக்குவதே எனது நோக்கம். வருவாய் சீராக இருந்தாலும் செலவுஅதிகரித்துள்ளது. நிர்வாகம் மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகளுக்காக செய்யப்பட்ட செலவினங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். இதே போல் வரிவிவகாரங்களையும் கவனிக்க வேண்டி உள்ளது. செலவினங்களை குறைத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை முதல்தர கிரிக்கெட் வீரர்களின் நிதி ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.


Next Story