கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா + "||" + Cricket T20: Australia defeated Pakistan

20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. அந்த அணி வீரர் ஸ்டீவன் சுமித் 80 ரன்கள் விளாசினார்.
கான்பெர்ரா,

கான்பெர்ராவில் நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பதம் பார்த்தது. ஸ்டீவன் சுமித் 80 ரன்கள் விளாசினார்.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி வெகுவாக தடுமாறியது. கேப்டன் பாபர் அசாம் நிலைத்து நின்று ஆட இன்னொரு புறம் பஹார் ஜமான் (2 ரன்), ஹாரிஸ் சோகைல் (6 ரன்), விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (14 ரன்), ஆசிப் அலி (4 ரன்) வரிசையாக நடையை கட்டினர். அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களில் (38 பந்து, 6 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார்.


இறுதி ஆட்டத்தில் இப்திகார் அகமது பாகிஸ்தான் அணியை தூக்கி நிறுத்தினர். கேன் ரிச்சர்ட்சனின் ஒரே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விரட்டியடித்தார். அவரது அதிரடி ஜாலத்தால் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 150 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டிப்பிடித்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 63 ரன்கள் திரட்டினர். இப்திகார் அகமது 62 ரன்களுடன் (34 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார்.

அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. டேவிட் வார்னர் 20 ரன்களில் கிளன் போல்டு ஆனார். கடந்த 5 இன்னிங்சில் முதல்முறையாக அவர் ஆட்டம் இழந்து இருக்கிறார். கேப்டன் ஆரோன் பிஞ்ச் 17 ரன்னிலும், பென் மெக்டெர்மோட் 21 ரன்னிலும் வெளியேறினர். இதற்கு மத்தியில் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைகொண்டு விளையாடிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் பாகிஸ்தானின் பந்து வீச்சை சிதறடித்து தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. தனது 4-வது அரைசதத்தை கடந்த ஸ்டீவன் சுமித் 80 ரன்களுடனும் (51 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஆஷ்டன் டர்னர் 8 ரன்னுடன் களத்தில் இருந்தனர். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். அதே சமயம் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக ருசித்த 6-வது வெற்றியாக இது பதிவானது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெர்த்தில் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பகல்-இரவு டெஸ்டில் பாகிஸ்தான் திணறல்: ஆஸ்திரேலிய அணி 589 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’
அடிலெய்டில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 589 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
2. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பாகிஸ்தானை பந்தாடியது இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை பந்தாடி உலக குரூப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
3. சீனாவுடனான வா்த்தக வழித்தடம் - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
சீனாவுடனான வா்த்தக வழித்தடம் தொடர்பாக, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
4. ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.
5. வரலாறு காணாத பாதிப்பு: பாகிஸ்தானில் 50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்
பாகிஸ்தானில் 50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது வரலாறு காணாத பாதிப்பாக கருதப்படுகிறது.