இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டோனி, மீண்டும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராஞ்சி,
சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு எந்த போட்டியிலும் டோனி பங்கேற்கவில்லை. தென்னாப்பிரிக்கா மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான டி 20-தொடரில் சேர்க்கப்படவில்லை, இது அவரது ஓய்வு குறித்து மேலும் ஊகங்களுக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில், டோனி மீண்டும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் டோனி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
டோனி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், அடுத்து வரவிருக்கிற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.
If this doesn’t give you Goosebumps, we don’t know what will.🔥😇