கிரிக்கெட்

பெற்ற தாயின் இறப்புக்கு செல்லாத பாகிஸ்தான் வீரர் + "||" + Pakistani soldier who did not go to the death of his mother

பெற்ற தாயின் இறப்புக்கு செல்லாத பாகிஸ்தான் வீரர்

பெற்ற தாயின் இறப்புக்கு செல்லாத பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் வீரர் ஒருவர் தனது பெற்ற தாயின் இறப்புக்கு செல்ல முடியாத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் 16 வயதான நசீம் ஷா இந்த டெஸ்டில் அறிமுக வீரராக இடம் பெற வாய்ப்புள்ளது. இவர் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, உடல்நலக்குறைவால் அவரது தாயார் இறந்த தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார். ஆனால் இங்கிருந்து புறப்பட்டு அவரது சொந்த ஊருக்கு செல்ல கிட்டத்தட்ட 48 மணி நேரம் ஆகும். ஆனால் 24 மணி நேரத்திற்குள் இறுதிச்சடங்குகளை செய்து முடிக்க வேண்டிய சூழலில் அவரது சகோதரர்கள் தாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாகவும், தாயாரின் ஆசைப்படி அங்கு தொடர்ந்து விளையாடும்படியும் நசீம் ஷாவிடம் கூறினார்கள். சக வீரர்கள் அவருக்கு ஆறுதலாக உள்ளனர். இந்த டெஸ்டில் களம் இறங்கினால், அது அவருக்கு உணர்வுபூர்வமாக அமையும். நசீம் ஷா, மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசக்கூடியவர் ஆவார்.தொடர்புடைய செய்திகள்

1. ராம்ஜெத்மலானி இறந்ததால் காலியான இடம்: மாநிலங்களவை இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி
ராம்ஜெத்மலானி இறந்ததால் காலியாக இருந்த இடத்துக்கு நடந்த மாநிலங்களவை இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற்றது.