கிரிக்கெட்

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி 2 பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுமா? - கங்குலி பதில் + "||" + Indian team to play 2 day-night Test series in Australia? - Ganguly's answer

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி 2 பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுமா? - கங்குலி பதில்

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி 2 பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுமா? - கங்குலி பதில்
ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி 2 பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுமா? என்பதற்கு கங்குலி பதிலளித்தார்.
கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணி 2021-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளை பகல்-இரவு ஆட்டமாக நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.


அடுத்த மாதத்தில் (ஜனவரி) ஆஸ்திரேலிய அணி, இந்தியா வந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி தொடரின் போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பகல்-இரவு டெஸ்ட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான தனது முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது. இதனால் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் ஒரு பகல்-இரவு போட்டியில் விளையாடலாம்’ என்று யோசனை தெரிவித்து இருந்தார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 பகல்-இரவு போட்டியில் விளையாடுமா? என்று கங்குலியிடம் கேட்கப்பட்டதற்கு, ‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து இது குறித்து அதிகாரபூர்வமாக வேண்டுகோள் எதுவும் வரவில்லை. 4 டெஸ்ட் போட்டி தொடரில் 2 பகல்-இரவு போட்டியில் விளையாடுவது என்பது அதிகமானதாகும். ஒவ்வொரு தொடரிலும் ஒரு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடலாம்’ என்று பதிலளித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை நீங்கள் பழிவாங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ‘இதுபோன்ற உண்மைக்கு புறம்பான யூகங்கள் ஏன் கிளம்புகிறது என்று தெரியவில்லை. இத்தகைய யூகங்களுக்கு எல்லாம் என்னிடம் பதில் இல்லை. நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் அந்த பதவியில் நீடிப்பீர்கள். நீங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அந்த இடத்துக்கு இன்னொருவர் வரத்தான் செய்வார். நான் விளையாடிய காலத்திலும் இதுபோல் தான் நடந்தது’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்
பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி 328 ரன்கள் இகலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தது.
2. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா? - கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. தொடரை இழந்து விட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
5. டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.