செல்போன் உதிரிபாகத்தில் கோலியின் உருவத்தை உருவாக்கிய ரசிகர்


செல்போன் உதிரிபாகத்தில் கோலியின் உருவத்தை உருவாக்கிய ரசிகர்
x
தினத்தந்தி 5 Jan 2020 10:19 PM GMT (Updated: 2020-01-06T03:49:45+05:30)

செல்போன்களின் உதிரி பாகங்களை பயன்படுத்தி ரசிகர் ஒருவர் விராட் கோலியின் உருவப்படத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.

கவுகாத்தி,

கவுகாத்தியை சேர்ந்த ராகுல் பரேக் என்ற கிரிக்கெட் ரசிகர், பழைய செல்போன்களின் உதிரி பாகங்களை பயன்படுத்தி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் உருவப்படத்தை உருவாக்கியுள்ளார்.

வெவ்வேறு வடிவிலான உதிரிபாகங்கள், வயர்களை கச்சிதமாக இணைத்து தத்ரூபமாக கோலியின் உருவத்தை கொண்டு வந்து ஆச்சரியப்படுத்திய அந்த ரசிகரை விராட் கோலி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் இந்த ஓவியத்தில் தனது ஆட்டோகிராப்பையும் பதிவிட்டார். பிறகு கோலிக்கு அந்த ஓவியத்தை பரிசாக ராகுல் பரேக் வழங்கினார். இதற்காக பகல்-இரவு பாராமல் 3 நாட்கள் செலவிட்டதாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

Next Story