கிரிக்கெட்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை சுருட்டியது ஆப்கானிஸ்தான் + "||" + Junior World Cup Cricket Afghanistan rolled down South Africa

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை சுருட்டியது ஆப்கானிஸ்தான்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை சுருட்டியது ஆப்கானிஸ்தான்
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவை சுருட்டி எளிதில் வெற்றி பெற்றது.
கிம்பெர்லி, 

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

கிம்பெர்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி, ஆப்கானிஸ்தானை (டி பிரிவு) எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி, ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திண்டாடியது. கேப்டன் பிரைஸ் பார்சன்ஸ் (40 ரன்), லுக் பியூபோர்ட் (25 ரன்), ஜெரால்டு கோட்ஸீ (38 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 29.1 ஓவர்களில் 129 ரன்களுக்கு சுருண்டது. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஷபியுல்லா கபாரி 9.1 ஓவர்களில் 2 மெய்டனுடன் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

அடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 25 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்ராஹிம் ஜட்ரன் (52 ரன்), இம்ரான் மிர் (57 ரன்) அரைசதம் அடித்தனர். பந்து வீச்சில் மிரட்டிய கபாரி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இன்றைய லீக் ஆட்டங்களில் வங்காளதேசம் -ஜிம்பாப்வே (சி பிரிவு), நியூசிலாந்து-ஜப்பான் (ஏ), ஐக்கிய அரபு அமீரகம்-கனடா (டி), ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் (பி) ஆகிய அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் இலங்கையுடன் (ஏ) நாளை மோதுகிறது. வெவ்வேறு மைதானங்களில் நடக்கும் எல்லா ஆட்டங்களும் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மைதானத்தில் அத்துமீறி நடந்த 5 வீரர்கள் மீது ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியின் போது மைதானத்தில் அத்துமீறி நடந்து கொண்ட 5 வீரர்கள் மீது ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
2. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேச அணி முதல் முறையாக ‘சாம்பியன்’: இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி, நடப்பு சாம்பியன் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக கோப்பையை வசப்படுத்தி சாதனை படைத்தது.
3. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நியூசிலாந்தை வீழ்த்தியது
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி, நியூசிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
4. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு தகுதி
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது. இதன்படி அந்த அணி இந்தியாவுடன் 4-ந்தேதி மோத உள்ளது.
5. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வங்காளதேசம்
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின் கால்இறுதியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வங்காளதேச அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.