கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் பிரித்வி ஷாவுக்கு இடம் + "||" + One-day cricket against New Zealand: Indian team to the Place of the Prithvi Shaw

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் பிரித்வி ஷாவுக்கு இடம்

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் பிரித்வி ஷாவுக்கு இடம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்யில், இந்திய அணியில் பிரித்வி ஷாவுக்கு இடம் கிடைத்துள்ளது,
புதுடெல்லி,

நியூசிலாந்து தொடருக்கான இந்திய 20 ஓவர் போட்டி அணி ஏற்கனவே வெளியான நிலையில் நேற்று ஒரு நாள் போட்டி அணி அறிவிக்கப்பட்டது. ஷிகர் தவான் காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக 20 வயதான பிரித்வி ஷா இடம் பிடித்துள்ளார். அவர் ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரராக களம் காண வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் முதலாவது ஆட்டத்தின் போது பந்து தாக்கி காயமடைந்த இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் அணிக்கு திரும்பியுள்ளார். இன்னும் முழு உடல்தகுதியை எட்டாத ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை.


நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி வருமாறு:-

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், கேதர் ஜாதவ்.

இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 5-ந்தேதி ஹாமில்டனில் நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி 560 ரன்கள் குவிப்பு
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி 560 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சார்பில் முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதம் அடித்தார்.
2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி ‘திரில்’ வெற்றி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி ‘திரில்’ வெற்றிபெற்றது.
3. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 165 ரன்களில் “ஆல் அவுட்”
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 165 ரன்களில் “ஆல் அவுட்” ஆனது.
4. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
5. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ; இந்திய அணி தடுமாற்றம்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்களை சேர்த்துள்ளது.