கிரிக்கெட்

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி + "||" + First 20-over match: Pakistan win by 5 wickets

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி:  5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
வங்காளதேச அணிக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

* இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கியது. மழையால் உணவு இடைவேளைக்கு பிறகு ஆரம்பித்த இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.


* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த ஐதராபாத் எப்.சி.-மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் எப்.சி.கோவா- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

* இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு பதவிக்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கரும் விண்ணப்பித்து உள்ளார். ஏற்கனவே முன்னாள் வீரர்கள் எல்.சிவராமகிருஷ்ணன், சேத்தன் ஷர்மா, நயன் மோங்கியா, ராஜேஷ் சவுகான் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்த இந்தியா ஏ அணிக்கு எதிரான 2-வது அதிகாரபூர்வமற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து ஏ அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஜார்ஜ் வொர்க்கரின் சதத்தின் (135 ரன்) உதவியுடன் நியூசிலாந்து ‘ஏ’ நிர்ணயித்த 296 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய ‘ஏ’ அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 266 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக குருணல் பாண்ட்யா 51 ரன்னும், இஷான் கிஷன் 44 ரன்னும், விஜய் சங்கர் 41 ரன்னும் எடுத்தனர். தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில் கடைசி ஆட்டம் நாளை நடக்கிறது.

* லாகூரில் நேற்று நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 142 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சோயிப் மாலிக் அரைசதம் (58 ரன்) அடித்தார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக 6 தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி அதன் பிறகு பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.

* பிரிமீயர் பேட்மிண்டன் லீக்கில் சென்னையில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் பெங்களூரு ராப்டர்சை தோற்கடித்தது.