ரஞ்சி கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை கடந்தார், வாசிம் ஜாபர்


ரஞ்சி கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை கடந்தார், வாசிம் ஜாபர்
x
தினத்தந்தி 5 Feb 2020 12:08 AM GMT (Updated: 5 Feb 2020 12:08 AM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை வாசிம் ஜாபர் கடந்தார்,

வதோதரா,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் வதோதராவில் நேற்று தொடங்கிய லீக் ஆட்டத்தில் தமிழக அணி, பரோடாவை சந்தித்தது. டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த தமிழக அணி, பரோடாவை முதல் இன்னிங்சில் 174 ரன்களுக்குள் சுருட்டியது. தமிழக வீரர் முகமது 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்தது. முன்னதாக தமிழக வீரர் அபினவ் முகுந்த் 31 ரன்களை எட்டிய போது முதல் தர போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். பாட்டியாலாவில் நடந்து வரும் இன்னொரு லீக் ஆட்டத்தில் ஆந்திரா அணி, பஞ்சாப்பை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 97 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. பஞ்சாப் அணியின் சித்தார்த் கவுல் ‘ஹாட்ரிக்’ விக்கெட் உள்பட 5 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 108 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஆந்திர அணியில் சோகைப் கான், ஆஷிஷ் தலா 5 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆந்திர அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் நேற்று ஒரேநாளில் 24 விக்கெட்டுகள் சரிந்தன.

நாக்பூரில் நடந்து வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் விதர்பா அணி, கேரளாவை எதிர்கொண்டது. முதல் இன்னிங்சை ஆடிய விதர்பா அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. முன்னாள் இந்திய வீரரும் விதர்பா பேட்ஸ்மேனுமான 41 வயதான வாசிம் ஜாபர் 19 ரன்கள் எடுத்த போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 12 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் அவர் ரஞ்சி போட்டியில் 12 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Next Story