கிரிக்கெட்

விவசாயியாக மாறிய டோனி + "||" + Dhoni who became a farmer

விவசாயியாக மாறிய டோனி

விவசாயியாக மாறிய டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, தற்போது விவசாயியாக மாறி உள்ளார்.
ராஞ்சி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 38 வயதான டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பது சந்தேகம் தான். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவர் விரைவில் பயிற்சியை தொடங்க உள்ளார்.


ஓய்வு நேரத்தில் டோனி வித்தியாசமாக எதையாவது செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். சமீபத்தில் டோனி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ஸ்டேடியத்தின் ஆடுகளத்தில் ரோலர் எந்திரத்தை ஓட்டியது வைரலானது. இப்போது அவர் விவசாயம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதில், இயற்கை முறையில் தர்ப்பூசணி பயிடுவதற்கு விதைகளை அவரே நிலத்தில் விதைக்கிறார். பயிரிடுவதற்கு முன்பாக விவசாயிகள் செய்வது போல் அவரே ஊதுபத்தி ஏற்றி, தேங்காய் உடைத்து வணங்குகிறார்.

ராஞ்சியில் இந்த தர்ப்பூசணி தோட்டத்தை அமைத்துள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ள டோனி, 20 நாட்களுக்கு முன்பு பப்பாளி நடவு செய்யப்பட்டதாகவும், முதல்முறையாக விவசாயத்தில் கால்பதித்தது நெகிழ்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கடத்தூர் அருகே, நிலத்தகராறில் பொக்லைன் டிரைவர் அடித்துக்கொலை விவசாயி கைது
கடத்தூர் அருகே நிலத்தகராறில் பொக்லைன் டிரைவரை கட்டையால் அடித்துக்கொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
2. உத்தனப்பள்ளி அருகே விவசாயி கொலை வழக்கில் திராவிட விடுதலை கழக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேர் கைது
உத்தனப்பள்ளி அருகே விவசாயி கொலை வழக்கில் திராவிட விடுதலை கழக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
3. உத்தனப்பள்ளி அருகே விவசாயி கொலையில் 5 பேர் கைது
உத்தனப்பள்ளி அருகே விவசாயி கொலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. கிரிக்கெட் விசயத்தில் டோனி ஒருபோதும் பாகுபாடு பார்க்கமாட்டார் - ஆர்.பி.சிங்
கிரிக்கெட் விசயத்தில் முடிவு எடுப்பதில் டோனி ஒருபோதும் பாகுபாடு பார்க்கமாட்டார் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார்.
5. சிறிய பேட்டை பயன்படுத்த வேண்டாம் என்று கெஞ்சிய டோனி: நினைவு கூறுகிறார் ஹைடன்
சிறிய பேட்டை பயன்படுத்த வேண்டாம் என்று டோனி கெஞ்சியதாக மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.