கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அயர்லாந்து வெற்றி + "||" + 20th over cricket against Afghanistan: Ireland beat the Sixers by the last ball of the Super Over

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அயர்லாந்து வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அயர்லாந்து வெற்றி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அயர்லாந்து வெற்றிபெற்றது.
நொய்டா,

அயர்லாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிரேட்டர் நொய்டாவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமன் (டை) ஆனது. கடைசி 3 பந்தில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்ட போது ரஷித்கான் ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். அத்துடன் எக்ஸ்டிரா வகையில் 2 ரன்னும் கிடைத்ததால் ஆட்டம் சமன் ஆகிப்போனது.


இதன் பின்னர் கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் ஒரு விக்கெட்டுக்கு 8 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய அயர்லாந்து அணி முதல் 5 பந்தில் ஒரு விக்கெட்டை இழந்து 6 ரன் எடுத்தது. இறுதி பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் வீசிய கடைசி பந்தை கெவின் ஓ பிரையன் சிக்சருக்கு விரட்டி திரில் வெற்றியை தேடித்தந்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக 12 தோல்விகளுக்கு பிறகு அயர்லாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இருப்பினும் 3 போட்டி கொண்ட இந்த தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


தொடர்புடைய செய்திகள்

1. “கொரோனாவுக்கு எதிரான போர் நீண்டது” - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி, ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நேற்று வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
2. ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகினர்.
3. ஆப்கானிஸ்தானில் படை குறைப்பு செய்ய அமெரிக்கா முடிவு
ஆப்கானிஸ்தானில் படை குறைப்பு செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
4. ஆப்கானிஸ்தானில் 900 தலீபான் கைதிகள் விடுவிப்பு
ஆப்கானிஸ்தானில் 900 தலீபான் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
5. ஆப்கானிஸ்தானில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் சாவு - மற்றொரு தாக்குதலில் 10 போலீஸ் அதிகாரிகள் பலி
ஆப்கானிஸ்தானில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர். மற்றொரு தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.