கிரிக்கெட்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியை நேரில் பார்த்த ரசிகருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Women Over 20 World Cup Cricket Corona damage to the fan

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியை நேரில் பார்த்த ரசிகருக்கு கொரோனா பாதிப்பு

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியை நேரில் பார்த்த ரசிகருக்கு கொரோனா பாதிப்பு
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஸ்டேடியத்துக்கு சென்று பார்த்த ரசிகர் ஒருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன்,

7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியை 86,174 ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர். இந்த போட்டியை ஸ்டேடியத்துக்கு சென்று பார்த்த ரசிகர் ஒருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மெல்போர்ன் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரசிகர் போட்டியை அமர்ந்து பார்த்த கேலரி மற்றும் இருக்கை விவரத்தை ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் மனித சேவை துறை வெளியிட்டு இருப்பதுடன் அந்த கேலரியில் அமர்ந்து போட்டியை பார்த்தவர்கள் யாரேனும் கொரோனா பாதிப்பு குறித்து உணர்ந்தால் மருத்துவ சோதனை செய்து உரிய சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் திருக்கோவிலூர் அருகே பரபரப்பு
திருக்கோவிலூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ‘பெண்களை கவனச்சிதறலாக பார்ப்பது அர்த்தமற்றது’ - சானியா மிர்சா வேதனை
பெண்களை கவனச்சிதறலாக பார்ப்பது அர்த்தமற்றது என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வேதனை தெரிவித்துள்ளார்.
3. விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூரில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் போராட்டம்
விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூரில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
4. டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பெண்கள் திடீர் போராட்டம்
டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. குடிநீர் வழங்காததால் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை
குடிநீர் வழங்காததால் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை.