பந்தை எப்படி கேட்ச் செய்ய வேண்டும் மகளுடன் சேர்ந்து கற்றுக்கொடுத்த டோனி


பந்தை எப்படி கேட்ச் செய்ய வேண்டும் மகளுடன் சேர்ந்து கற்றுக்கொடுத்த டோனி
x
தினத்தந்தி 6 May 2020 12:23 PM GMT (Updated: 6 May 2020 12:23 PM GMT)

தனது செல்ல பிராணிக்கு பந்தை எப்படி கேட்ச் செய்ய வேண்டும் என டோனி தனது மகள் ஸிவா உடன் சேர்ந்து கற்றுக்கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை,

கொரோனா வைரஸ் காரணமாக மே 17-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊடரங்கால் கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் தனிமையில் உள்ளனர். பொழுதுபோக்கிற்காகவும், ரசிகர்களுக்காவும் பலர் இன்ஸ்டாகிராம் லைவ் அரட்டை மூலம் சக வீரர்களுடன் உரையாடி வருகின்றனர்.

இந்தநிலையில்  கொரோனா தாக்கத்திற்கு இடையிலும் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வி டோனியை பற்றியே. டோனி, எப்போது மீண்டும் களத்திற்கு வருவார் என்ற கேள்வியே அவர்களை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பதிலளிக்கும் விதமாக டோனி குறித்த வீடீயோ ஒன்று தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

சிஎஸ்கே நிர்வாகம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், டோனி தனது பண்ணை வீட்டில் பொழுதை கழிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

தனது செல்ல மகள் ஸிவா உடன் சேர்ந்து செல்ல பிராணிக்கு பந்தை எப்படி கேட்ச் செய்வது என்பதை இருவரும் கற்றுக்கொடுக்கின்றனர். டோனி, புல்தரையில் அமர்ந்து கொண்டு, மகள் ஸிவாவுக்கு பந்து வீச கற்றுக்கொடுக்க, மழலை மொழியில் அதனை ஸிவா நாய்க்கு சொல்ல, செல்ல பிராணி அதனை பிடித்து விளையாடுகிறது.

சாக்‌ஷி எடுத்த இந்த வீடியோவை சிஎஸ்கே டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

Next Story